2030 க்குள் அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கவே வீடு வீடாக சென்று மக்கள் கனவை அறியும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது. மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாடு அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த சந்திப்பில், பொதுமக்களின் குடும்ப கனவுகளை நேரடியாக அறிந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு தமிழ்நாடு மீள்வதற்கே பல மாதங்கள் ஆனது. நிதி நெருக்கடிகளை கடந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளாா்.
“இன்று தமிழ்நாடு ஒரு ‘சூப்பர் ஸ்டேட்’ என்ற பெயரை பெற்றுள்ளது. மேலும், முதலமைச்சர் செயல்படுத்திய பல திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன” என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், “உங்க கனவை சொல்லுங்க” என்ற பெயரில் புதிய மக்கள் தொடர்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அறிவித்துள்ளாா். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய வாழ்க்கை சார்ந்த கனவுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதுதான் என அவர் விளக்கினார்.
இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 50,000 தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்திக்க உள்ளனர். முதற்கட்டமாக, தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று “கனவு அட்டை” எனப்படும் படிவத்தை வழங்குவார்கள். அந்த படிவத்தில், குடும்பத்தின் முக்கியமான மூன்று கனவுகளை பதிவு செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படும்.
குடும்பங்களின் கனவுகள் மட்டுமின்றி, இளம் தலைமுறையினரின் கனவுகளையும் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். படிவங்கள் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, நிரப்பப்பட்ட கனவு அட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை ஒரு பிரத்யேக செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், மக்கள் நேரடியாக தங்கள் தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகளை அரசிடம் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் தெரிவித்துள்ளாா்.
இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார். மேலும், ஜனவரி 11 முதல், “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டத்திற்கான இணையதளமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
மக்களின் கனவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்தும் ஒரு புதிய முயற்சியாகவும், 2030 க்குள் அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கவே புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளாா்.
கடப்பாரையா? அடேய் அட்டக்கத்தி… சீமானை பொளந்த கரு. பழனியப்பன்!


