தொடக்கத்தில் கண்ணந்தங்குடிகணேசன், ஒரத்தநாடு கணேசன் என அறியப்பட்டவர்தான், பின்னாளில் எல்.ஜி என அன்பொழுக அழைக்கப்பட்ட எல்.கணேசன் அவர்கள்.
தஞ்சை மாவட்ட குழுத்தலைவராக – DISTRICT BOARD CHAIRMAN வீற்றிருந்த திராவிட இரத்தினம் சர்.A.T. பன்னீர்செல்வம் ”பாா்அட்-லா” அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பட்டுக்கோட்டை ராஜாமடம் மாணவர் விடுதியில் தங்கிபடித்து பள்ளிப்படிப்பை முடித்தவர். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் ”இண்டர்மீ டியட்” முடித்து, தொடர்ந்து பொருளியலில் இளங்கலை பட்டம் பெற்றவர், 1963-64ல் பி.எல் பட்டம் பெற்று எல்.கணேசன் பி.ஏ.பி.எல் ஆனார். திராவிட இயக்க நூல்களையும், பொதுவுடமை நூல்களையும் முற்றும் கற்றுணர்ந்தவர். காரல்மார்க்ஸின் மூலதனம்” உள்ளிட்ட நூல்களை படித்து முடித்து விமர்சித்தவர் அதில் ஒன்று, ” செல்வம் ஒரிடத்தில் குவிவதைவிட அதிகாரம் ஓரிடத்தில் குவிவதுதான் ஆபாத்தானது” என்ற நோக்கில் மார்க்ஸின் பாட்டாளி மக்களின் சர்வதிகாரத்தை விமர்சித்துவிட்டு, காரல்மார்க்ஸ் அதை தகுந்த முறையில் கணிக்கத் தவறியவர் என்ற விமர்சனத்தை முன்வைத்தவர்.

திராவிட இயக்க உணர்வின் இன்றைய நிலைத்த அரசியல் அடையாளமாக திகழும் தி.மு.க உணர்வும், பொதுவுடமை உணர்வும், ”கருப்பும் – சிகப்பும்” கலந்த உணர்வுதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் அணியும் சிகப்பு ‘துண்டால்” தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொண்டவர்.
திராவிட இயக்கத்தில்தான் தலைவர்களை பெரியார், அண்ணா, நாவலா், கலைஞர், பேராசிரியர்,அஞ்சாநெஞ்சன், குத்தூசி,சின்னக்குத்தூசி, சிந்தனைச்சிற்பி, நாவுக்ரசர், சொல்லின் செல்வர் வாலிபபபெரியார். டார்பிடோ தத்துவமேதை, என இன்னபிற அடைமொழிகளோடு அழைக்கும் ‘அடைமொழி மரபு உண்டு”.
பொதுவுடமை லட்சியத்தில் தன்னோடு பயணிக்கும் ஆண்பெண் இருபாலரையும் ஒருசேர விளிக்கும்சொல் ”தோழர்” என்பதாகும். பொதுவுடமை இயக்கத்தில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரைஅனைவருமே தோழர்கள் என்றுதான் அழைக்கப்படுவார்கள். அதோடு அவர்களையெல்லாம் அவரவரின் தந்தையின் பெயர் முதலெழுத்தையும், குறிப்பிட்ட நபரின் முதலழுத்தையும் இணைத்து இரண்டு ஆங்கில எழுத்துகளில் குறிப்பிட்டு அழைக்கும் மரபும் உண்டு அதாவது P.R.A.K.G.K.B.A.B.M.K என்பதாகும்
அப்படி கழகத்தில் L.G என்ற சுருகத்தோடு உலா வந்தவர் அண்ணன் L.கணேசன். தனக்கு நெருக்கமான தம்பிமார்களையும் எஸ்.ஜி ராஜமாணிக்கம், எல்.ஜி.தியாகாரி, எல்.ஜி செல்வராஜ். எல்.ஜி சம்பத் என அறியவைத்து, அழைக்கவைத்தவர். கொள்கை விளக்கமும், லட்சிய உரையும் அவரது தனித்த அடையாளம்.
எல். ஜியோடு எல்.ஜி ஒப்பீடு எல்.ஜி விஞ்சி நிற்பது
அரங்க கூட்டங்களில் கொள்கை விளக்கமளிக்கும் எல்.ஜியா? – பொதுக்கூட்ட மேடையில் பேசும் எல்.ஜியா? என்ற பட்டிமன்றத்தலைப்பின் தீர்ப்பு அரங்ககூட்ட எல்.ஜியாக தான் இருக்கமுடியும். இளம்பருவ படிப்புஅவரது நெஞ்சில் உரமேறி நின்றிருக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட கழகம்,திராவிட முன்னேற்ற கழக வரலாறுகள் அவருக்கு அத்துப்படி, சுருக்கமாக சொன்னால் திராவிட இயக்க வரலாற்றின் ஒப்பீட்டு நூல் – பார்வைநூல், Reference Book ஆக திகழ்ந்தவர்.
அறிஞர் அண்ணாவின் ”ஹோம்லேண்ட் ” ஆங்கில இதமும் ஆக்ஸ்போர்டு அகராதியும் புதின வாசிப்பும் எனது ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ள உதவியது என்பார், வாசித்த புத்தகங்களை நூலகமாக்கும் வழக்கம் அவருக்கு இல்லை இது குறித்து அவர் சொல்வது படித்து விட்டு தூக்கி போட்டுவிடுவேன் என்பதாகும்” படித்தவை அனைத்தும் அவரது முளையில் பதிந்துவிடும்.
எனவேதான் தடைபடாத சிந்தனையோட்டத்துக்கு சொந்தக்காரராக, ஒரு நடமாடும் நூலகமாகவே திகழ்ந்தாா்.
எல்.ஜி எழுதிய நூல்கள்
- நான் ஏன் தி.மு.க ஆனேன் என்கிற கொள்கை விளக்க நூல்
- 20 நூற்றாண்டு திராவிட இயக்க சாதனை
- காவிரி பிரச்சினை
- THAMIZH ELAM WILL NEVER PERISH
- RELEVANCE OF RESERVATION
- ஏன் வேண்டும் இடஒதுக்கீடு?
- 356 வது பிரிவும் கூட்பாட்சியும்
- ARTICLE 356 AND FEDERAL SETUP
- தலைவர் கலைஞர் பன்முகத்திறன் கொண்ட சகலகலா வல்லவர் A VERSATILE GENIUS
என்கிற ஆங்கில நூல்
ஆங்கில நூலின் சாராம்சம்
தலைவர் கலைஞர் இயக்கத்தின் தலைவர், நிர்வாகத்திறன் மிக்கவர், நல்ல தமிழ் எழுத்தாளர் தெள்ளுத்தமிழ் பேச்சாளர், பார்போற்றும் கவிஞர். புரட்சிமணம் கமழும் திரைவசனகர்த்தா நயத்தகு நாவன்மையாளர், தொல்காப்பியபூங்கா, குறளோவியம் இவற்றை சங்கத்தமிழில் படைத்துத் தந்த தமிழ் இலக்கியவாதி, KALAIGNAR IS NOT A SEASONAL POLITICIAN, HE IS A SEASONED POLITICIAN தலைவர் கலைஞர் அவர்கள் பருவநிலை அரசியல்வாதி அல்ல, பழுத்த அனுபவம் நிறைந்த அரசியல் மேதை KALAIGNAR HAD THE RARE ABILITY OF CONVERTING CHALLENGES AS OPPORTUNITIES சவால்களையெல்லாம் சாதனைகளாக மாற்றிக்காட்டும் அரிய திறன் படைத்தவர் KALAIGNAR IS AN ACE PARLIMENTARIAN, WITH A POLITICAL ACUMEN, A POWERFUL TONGUE AND A MIGHTY PEN, தலைவர் கலைஞர் எல்லாவற்றிலும் வலைமை பொருத்திய ஓடுநாடாளுமன்றவாதி, கூர்மையான அரசியல் ஞானம் படைத்தவர், சிறந்த நாவன்மையாளர், வல்லமை பொருத்திய எழுத்தாளர். QUICK IN THOUGHT QUICKER IN DECISION. QUICKEST IN EXECUTION, விரைவான சிந்தனை,விரைந்த முடிவு, அதனினும் விரைவாக செய்துமுடிக்கும் திறமையாளர்.

எல்.ஜி ஒளிவுமறைவு இல்லாத, கள்ளங்கபடமற்ற வெள்ளந்தியான பேச்சுக்கு சொந்தக்காரர். இது குறித்து தலைவர் கலைஞர் அவர்களே சற்று கடிதலோடு சொன்ன வார்த்தைகள் ”உள்ளதை உள்ளபடியே சொல்லி உபத்திரவத்தை விலைக்கு வாங்கும் எல்.ஜி” என்பதாகும்.
மாணவர்களின் அரசியல் பயிற்சிப் பாசறையாக திகழ்ந்த ”POLITICS OF ANNAMALAI” என வா்ணிக்கப்படும் அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் ஒரு சாலை மாணாக்கர்களாக பயின்ற நாவலர், பேராசிரியர். மதியழகன், இளம்வழுதி போன்றோர் இணைந்து நின்று திராவிட இயக்க மாணவ அரசியலுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார்கள் என்றால் அத்தகைய மாணவர் பட்டாளத்தின் எழுச்சிமிகு அரசியல் பங்களிப்பை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர்களில் “எல்.ஜி” முக்கியமானவர். மொழிப்போர் தளபதியாக செயல்பட்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பொதுபோராட்டமாக வடிவுபெறச் செய்து ஒரு வரலாற்று திருப்பத்திற்கு வழிவகுத்தவர் எல். கணேசன் என்ற இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நற்சான்று பெற்றவர்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 60 ஆண்டுகாலமாக (1960-2026) உச்சரிக்கப்பட்டுவரும் பெயர் எல்.ஜி என்கிற எல்.கணேசன் ஆவார். I WOULD LIKE TO BE A POLITICAL THINKER, RATHER THAN A POLITICIAN SO அரசியல்வாதியாக இல்லாமல், அரசியல் சிந்தனையாளராக இருக்க விரும்புபவன் என்பதை அடிக்கடி சொல்லக்கூடியவர்.
மொழிப்போர்
அரசியல் சட்டம் துவங்கிய 1950-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருந்து வந்த நிலையில் 1965 ஜனவரி 25-ல் ஆங்கிலம் அறவே அகற்றப்பட்டு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக தொடரும் நிலை. இது தமிழர்களை இரண்டாந்தர குடிமக்கள் ஆக்கும் செயல்.
1959ல் இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற வாக்குறுதியை பிரதமர் நேரு வழங்கியிருந்தார். 1963-ல் வந்த ஆட்சிமொழி சட்டம்,நேரு உறுதிமொழியை உறுதிப்படுத்தவில்லை. மாணவர்கள் மத்தியில் கட்சி அரசியல் தாண்டி பொதுமக்கள் போராட்டம் என்ற உணர்வை பெற்றது. கடைசி தமிழனின் கடைசிதுளி ரத்தம் இருக்கும் வரை இந்தியை நுழைய விடமாட்டோம் என்று போராட்டம். இந்தி திணிப்பை தடுத்து நிறுத்தும் போராட்டமாக மொழிக்காக்கும் தற்காப்பு போராட்டமாக உருவெடுத்தது.
மாணவர்களை கல்லூரி கல்லூரியாக சென்று அணி திரட்டி இந்தி ஒருஅரக்கி என்ற அச்ச உணர்வை பதட்டத்தை உருவாக்கியவர். தமிழகமே போர்க்கோலம். சுற்பாறை போர்க் போன்று நின்று போராட்டத்தை அடக்கினார் என்று லால் பகதூர் சாஸ்திரி முதல்வர் பக்தவச்சலத்திற்கு பாராட்டு தெரிவித்தார். போராட்டம் உச்சக்கட்டம் அடைந்த போது பேரறிஞர் அண்ணர் அவர்கள் எல்.ஜியை அழைத்து ராணுவம் வரும். துப்பாக்கி சூடு நடக்கும். உயிர்கள் பலியாகும். தமிழ்நாடே கலவர பூமியாகும் என எச்சரித்து போராட்டத்தை திரும்பபெறும்படி வலியுறுத்தினார்கள்.
அண்ணா அவர்கள் எல்.ஜி விடம் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் விவாதித்து முடிவில் சொன்னது THEN 60 AND CALL OF THE AGITATION AND REPORT ME BEFORE 12TH IN THE MIDNIGHT இன்று அழுத்தமாக அறிவுறுத்தினார்கள். அதற்கு எல். ஜி அவர்கள் சொன்ன பதில் ”THOUGH NOT CONVINCED, I WILL TRY TO TAKE UP YOUR ADVICE” என்பதாகும். அதற்கு அண்ணா அவர்கள் சொன்னது CAUTIOUSNESS IS NOT COWADICE எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனம் அல்ல என்பதாகும். இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப கட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்களை பார்த்து சொன்னது IF YOU WERE LAL BAHADUR SHASTRI, I WOULD HAVE BAMBARDED YOU, UNFORTUNATELY YOU ARE BELOVED LEADER” நீங்கள் லால்பகதூர் சாஸ்திரியாக (உள்துறை அமைச்சர்) இருந்தால் வெடிகுண்டால் தாக்கியிருப்பேன். துரதிருஷ்டவசமாக நீங்கள் எனது உளங்கவர்ந்த தலைவர் ஆங்கில தொடரும் என்ற நேருவின் வாக்குறுதி காப்பற்றப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பிற்கிணங்க 50 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவுற்றது.
ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய 1967ம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போய் வேட்பாளர் என்ற நிலையில் தேர்தல் வேலையை துவக்க சொன்ன தலைவர் கலைஞரிடம் எல்.ஜி சொன்னது “IT IS A COSTLY GAME FOR WHICH I AM UNSUITABLE”, என்று பதில் சொன்னவர்.
1967-ல் சட்டமன்றப்பணி துவக்கம் 1968-ல; அறிஞர் அண்ணா தலைமையில் திருமணம் ஒவ்வொரு ஆணிண் வெற்றியின் பின்புலத்தில் பெண் இருப்பார் என்பதற்கு ஒரு இலக்கணமாக திகழும் அவரது துணைவியார் கமலா அம்மாள் ஆவார்.எல்.ஜி யின் லட்சிய கனவுகளோ இணைந்து வாழ்ந்த ஒரு லட்சியப் பெண்மணி எல்லோரிடத்திலும் மரியாதை கலந்த அன்பொழுகும் பேச்சு. தாயுள்ள உபசரிப்பு. அந்த வகையில் எல்.ஜி கொடுத்து வைத்தவர்தான்.
மத்திய மாநில உறவு குறித்த இராஜமன்னார்குழு அறிக்கையை கழகத்தின் கொள்கைகுறிக்கோளுக்கேற்ப பரிசீலித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட “செழியன்-மாறன் “குழுவின் செயலாளராக பங்குப்பெற்று பணியாற்றியவர். அதையொட்டி 1974ல் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் முன்மொழியப்பட்ட மாநிலசுயாட்சி தீர்மானத்தை ஆதரித்து | ஆங்கிலத்தில் கருத்து செறிவுமிக்க உரையாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
வாரிசு அரசியல் என்பதற்கு அவர் சொல்லும் விளக்கம் இன்னாரது மகன் – இன்னாரது வாரிசு என்பது மட்டுமே ஒருவருக்கு தகுதி (Qualification) ஆகிவிட முடியாது. அதே வேளையில் அனைத்து தகுதிப்பாடுகளும் இருந்தும் இன்னாரது மகன் இன்னாரது வாரிசு என்பதே ஒருவருக்கு தகுதியின்மை (Disqualification) ஆகிவிடக்கூடாது என்பதாகும்.
1967, 1971, 1989 -ல் சட்டமன்ற உறுப்பினர் .1977ல் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பு இழப்பு. இடைத்தேர்தலில் எல். ஜிக்கு வாய்ப்பில்லாமல் பெரியவர் அன்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது எல்.ஜிக்கு மாநிலங்களவைக்கு உறுதிக்கொடுத்து
தலைமைக்கழக “மினிட்புத்தகத்தில்”- பதிவு செய்து முன்னுதாரணமில்லாத வாய்ப்பு எல்.ஜிக்கு வழங்கப்பட்டது.
சட்டமன்ற பேரவை மேலவை, நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை என நான்கு அவைகளிலும் அங்கம் பெற்று அலங்கரிக்கும் வாய்ப்பினை பெற்றவர்.
1989-ல் முதல்வர் கலைஞர் அவர்களின் Parliamentary Secretary ஆக இருந்தவர். நெருக்கடி நிலை காலத்தில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்களின் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று அவர் பேசிய பேச்சு தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. கழகத்தோர் மத்தியில் நம்பிக்கையை ஊட்டியது.
இங்கிலந்து நாட்டு சர்ச்சில் சொன்ன “London will take it” என்பதை “DMK Will take it” என்று அழுத்தந்திருத்தமாக கழகத்தவர் நெஞ்சில் பதியவைத்தவர். கழகசட்ட திருத்தக்குழுவில் பல முறை இடம் பெற்று பணியாற்றியவர்.
இந்தி எதிர்ப்பு வரலாறு
1938 ல் தொடங்கி 1965ல் உச்சத்தை தொட்ட மொழிப்புரட்சி உலகில் நடைபெற்ற பல புரட்சிகளின் வரலாற்றை ஊன்றிப்படித்து உத்வேகம் பெற்று வியூகம் வகுத்து மாணவர்களைப் போராட வைத்து தமிழகத்தையே கொற்குளிக்க செய்தவர். பிறரை முன்னிறுத்திபோராட்டத்தை ஒருங்கிணைந்து தன்னை பின்னிறுத்தி வெற்றி கண்டவர்.
ஆழத்தடங்கிய சிந்தனை. எடுத்தேன் விழ்த்தேன் என்று இல்லாமல் ஆரஅமர சிந்திப்பவர். எங்கெல்லாம் மனித குலத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் எனது கால்கள் பயணிக்கும் என்ற உலக புரட்சியாளன் சேகுவேராவோடு இணைந்து போராடி கியூபாவை வென்றெடுத்த வரலாறு என்னை விடுதலை செய்யும் “HIS TORY WILL ABSOLVE ME” என்று காவித்த பிடல் காஸ்ட்ரோ எனது புரட்சி புரட்சி குறித்து சொல்லிய வாசகம் REVOLUTION IS NOT A BED OF ROSES, BUT IT’S A STRUGGLE BETWEEN THE FUTURE AND THE PAST புரட்சி என்பது ரோஜா மலர் படுக்கையல்ல: கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நட்க்கும் போராட்டமே புரட்சி என்பதாகும்.
தமிழ்நாட்டில் நடந்த மாணவப்போராட்டம் தான் எங்களுக்கு உந்துசக்தியாக- Inspiration ஆக வெற்றியை தேடி தந்தது என மாணவர் தலைவராக இருந்து போராட்ட நடத்தி அசாம் மாநில முதலமைச்சரான பிரபுல்ல குமார் மகந்தா சொன்னது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பிறழ்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலும் கொள்கை சறுக்கலுக்கு ஆளாகாதவர், கொள்கையில் சமரசம் என்பதற்கே இடம்கொடுக்காதவர் திராவிட இயக்க சிந்தனையிலிருந்து சிறிதும் பிறழாதவர் திராவிட இயக்கத்தின் நிறைவான கொள்கைவாதி
அவரது அரசியல் அறிவும், ஆற்றலும்,திறமையும் விழலுக்கிறைத்த நீராகத் தொடராமல் மீண்டும் கழகத்தில் இணைந்து நிறைவு செய்தவர். வன்னியர்- சீர்மரபினர் உள்ளிட்டோரின் 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கழகத்தலைவர் முதல்வா கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கி செயலாக்கத்திற்கு வித்திட்டவர்.
எனவே தான் அவரது மறைவு தினத்தில் ஆங்கில பத்திரிக்கைள் VETERAN DRAVIDIAN IDOLOGUE L.GANESAN PASSES AWAY என்று குறிப்பிட்டதோடு He was spired by Thamizh Linguistic Movement and joined the DMK” என்று பெருமைப்படுத்தி எழுதின. கழகத்தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நெரில் அஞ்சலி செலுத்திவிட்டு MOZHIPOR THALAPATHI ELDER BROTHER L.GANESAN ”A COMMITTED FOLLOWER OF THE DRAVIDIAN MOVEMENT A COMMANDER OF THE LANGUAGE WAR WOULD BE REMEMBERED AS LONG AS THAMIZH CONSCIOUSE NESS ENDURED” என்றும்” HE WILL ALWAYS REMAIN ALIKE IN OUR HEARTS என்றும் தனது வலைத்தளத்தில் பதிவிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தினத்தில் எல்.ஜியை நினைவு கூறுவோம்.
கேள்வியை மாற்றிய சிபிஐ! விஜயை தூக்கிய என்.ஐ.ஏ! தவெக கதை முடிந்தது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!


