spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் இந்த ஆண்டு விரைவில் விரிவுப்படுத்தி தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

*விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினர். தொடர்ந்து மருத்துவமனை சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

we-r-hiring

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எந்த மாவட்டதிற்கு சுற்று பயணம் செய்தாலும் அந்தபகுதியிலுள்ள பள்ளியில் காலை சிற்றுண்டி தரமாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வோம். அதனடிப்படையில் ஆய்வு செய்ததில் தரமாக உணவு வழங்கப்படுபதாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர். காலை சிற்றுண்டி திட்டம் நகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்படுவது போல் பேரூராட்சி பள்ளிகளுக்கு வழங்கபடுமென முதலமைச்சர் பேரவையில் அறிவித்துள்ளார். விரைவில் விரிவுபடுத்தபடும். விளையாட்டு துறையில் 31 அறிவிப்புகள் கொடுத்துள்ளதை படிப்படியாக நிறைவேற்றப்படும்” என உறுதி அளித்தார்.

MUST READ