ஆதாரில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் விரைவில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் நிர்வாக அமைப்பான Unique Identification Authority of India (UIDAI) இந்த புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய வடிவில் அச்சிடப்படும் ஆதார் அட்டையில், பெயர், முகவரி, ஆதார் எண் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் வெளிப்படையாக காணப்படாது. ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் QRCODE மட்டுமே வெளியே தெரியும் வகையில் புதிதாக அச்சிட ஆதார் நிர்வாக அமைப்பான (UDAI) திட்டமிட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பது தடுக்கப்படும், QRCODE ஸ்கேன் செய்தால் மட்டுமே அத்தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையில் பெற முடியும். இதனால் தனிநபர் பாதுகாப்பு அதிகரிக்கும், தகவல் திருட்டு மற்றும் தவறான பயன்பாடு குறையும், அடையாள மோசடியை தடுக்க முடியும் என UDAI தெரிவித்துள்ளது.
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது… மெடாவை கண்டித்த உச்சநீதிமன்றம்…


