spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதவெக உடன் காங்கிரஸ்? ; பாஜகவுடன் தவெக! இதுதான் பார்ப்பன கடப்பாரையின் அரசியல்? பாலச்சந்திரன் ஐஏஎஸ்...

தவெக உடன் காங்கிரஸ்? ; பாஜகவுடன் தவெக! இதுதான் பார்ப்பன கடப்பாரையின் அரசியல்? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

-

- Advertisement -

விஜயிடம் பாஜக எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது என்றும், நாளைக்கே அவர் பாஜகவுடன் கூட்டணி செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழக அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார். குறிப்பாக பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். தேர்தல் களத்தில் சீமான் முந்தியுள்ளார். அதேவேளையில் வாழ்நாள் முழுவதும் இந்தியாவை பொருளாதார ரீதியாக சுரண்டிய பிரிட்டிஷ்காரர்களை குறித்து, அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் குறித்தும் நாம் பேசுகிறோம். ஆனால் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளியவர்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, பட்டியல் இன மக்களுக்காக பாடுபட்ட ஒரு மனிதர் பெரியார். அப்படிபட்ட தலைவரை பிராமண கடப்பாரையை கொண்டு இடிக்கப் போகிறேன் என்று சொன்ன பிறகு, சீமான் அடிப்படையிலேயே தவறானவர் என்று நினைக்கிறேன். அவர் 117 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியது, மாற்றுத் திறனாளிகளை வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால் அடிப்படையிலேயே பிரச்சினை உள்ளபோது அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

திமுக ஆட்சியில் குறைகளே இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் லஞ்சம், ஊழல் என்பது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இருக்கும். அதை எதிர்த்து போராட வேண்டிய ஆற்றல் உள்ளவர்கள் மக்கள் தான். அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆனால் அந்த குறையுடன் என்ன என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இன்றைக்கு பாஜக மாநிலத்தில் ஆட்சியில் இருந்திருந்தால், பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று லஞ்ச, ஊழல் பல மடங்கு அதிகரித்து இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பலமடங்கு அதிகரித்து இருக்கும். ஆனால் திமுக கொண்டுவந்த நிறைகள் எதுவும் இருந்திருக்காது. உத்தரபிரதேசத்தை குறிப்பிடும்போது இரண்டு மடங்கு வருமானம் கூடியிருக்கிறது. ஆனால் ஜிடிபி கூடவில்லை என்கிறபோது, அந்த பணம் எங்கே போயிருக்கும் என்பது உணர முடிகிறது. ஆனால் இங்கே அப்படி இல்லை. டிஸ்ட்ரிபியூட்டரி ஜஸ்டிஸ் என்பது உண்மையான முயற்சியில் நடைபெறுகிறது. இந்த முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது முக்கியமல்ல. திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்று முழு மனதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு மாதங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதேநேரம் சட்டமன்றத்தின் கடைசி அமர்வில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளார். தங்களுடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவிக்க வெளிநடப்பு செய்துள்ளனர். அதேநேரம், அவர்கள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு இந்த ஆட்சி தொடரும் என்று ஆசிர்வாதம் வழங்கிவிட்டு போய்விட்டார். சட்டப்பேரவைக்கு வெளியில் ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். அவரும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்லியுள்ளார். நான் ஓபிஎஸ் சொல்கிற கருத்துக்களை பெரிதாக எடுப்பதில்லை. ஓபிஎஸ் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் திமுகவை ஆதரித்து பேசினார் என்றால்? அவர் மீது நம்பகத்தன்மை வரும். அதேநேரம் திமுகவிடம் 2 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பேசினார் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை. கூட்டணி அதே நிலையில் தொடர்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் இன்னும் சிலர் காங்கிரஸ் தங்களுடன் வரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக கூறி வருகிறார்கள். கனிமொழி சொல்வது இன்றைய சூழலில் உண்மைதான். காங்கிரஸ் கட்சியில் சிலர் நடத்திய யுத்தத்தை முளையிலேயே கிள்ளாமல் விட்டதால், அவர்கள் மீதான நம்பகத்தன்மை தான் குறைந்துள்ளது. இதனால் அவர்களுக்கு எந்தவிதமான நன்மையும் அமையவில்லை. தவெக உடன் காங்கிரஸ் சேர்ந்தால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. நாளைக்கே தவெக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதைதான் செய்யப் போகிறார்கள். அந்த மாதிரியான ஒரு கட்சி தேசிய அளவிலான அரசியலுக்கு எந்த பயனும் தராது. இவற்றை எல்லாம் யோசித்திருக்க வேண்டும். எம்ஜிஆரிடம் இருந்த சாமர்த்தியமும், போராடும் குணமும் விஜயிடம் கிடையாது. கருரில் அப்படியான துயர சம்பவம் நடைபெற்ற போது, விஜய் ஓடிப்போனது தலைமைப் பண்பிற்கு அழகு அல்ல. அப்படியான ஒரு விபத்து நடந்தால் எம்ஜிஆர் தன்னுடைய காரில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பார். விஜய்க்கு அரசியல் பக்குவம் என்பது கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ