யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல் சேலையை நிறுத்தியது ”மேயர்ஸ்க்” நிறுவனம்.
ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொஹாவின் பல்வேறு இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதில், கத்தார் தலைநகர் தோஹாவின் பல பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. மேலும் கத்தாரில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான “மேயர்ஸ்க்”சரக்கு ஏற்றுமதிக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கான சரக்குக் கப்பல் சேவையை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதற்கிடையில் இலங்கைஅருகிலுள்ள கடற்பரப்பிலும் பதற்றம் நிலவுகிறது. இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் ஒரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடல் எல்லையை ஒட்டிய கடற்பரப்பில் அந்த கப்பல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் நலிந்தா தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்கா தொடங்கிவிட்டது.
ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா எந்நேரமும் தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இலங்கை கடற்பரப்பில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கியதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் அஜர்பைஜனில் நாட்டிலும் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அஜர்பைஜான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஈரான் தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா தாக்குதிலில் ஈரான் போர்க் கப்பல் மூழ்கியது… 100 வீரர்கள் கதி என்ன?


