பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூடியது. மக்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பதாகை மற்றும் பேனர்களை ஏந்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோசம் எழுப்பப்பட்டது குறிப்பாக “Compromise Prime Minister Down Down” என்றும் “Narendra Modi Down Down” என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதேபோல் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரண் அடைந்துவிட்டதாகவும் கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, 30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்குவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் மக்களவையிலும் இதே விவகாரத்தையும் முன்னிறுத்தி கேள்வி எழுப்பவும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர்.
‘கஃபாலா’ முறையை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் கோரிக்கை…
