சென்னை அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அகற்றி வருகின்றனர்.
அங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட முகப்புகள் மற்றும் கடைகளை அகற்ற வருவதால் பரபரப்பு.

சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் ஏழுக்கு உட்பட்ட சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சாலை ஓரம் உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள முகப்பு மற்றும் சிறிய கடைகளால் பாதசாரிகள் கடும் அவதியுறும் சூழல் இருப்பதாகவும் மழைநர் வடிகால் மீதும் ஆக்கிரமித்து உள்ளதால் சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தொடர்ந்து நோட்டீஸ் வழங்கிய உள்ளனர்.
இந்நிலையில் கடை உரிமையாளர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல்துறை அம்பத்தூர் மாநகராட்சி அதிகாரிகள் ஜே சி பி இயந்திர உதவியுடன் இடித்து அகற்றி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
இதனால் அவர்களுடன் கடை உரிமையாளர்கள் வியாபாரிகள் வாக்குவாதம் செய்வதால் அம்பத்தூர் சட்ட ஒழுங்கு போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரில் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 300க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.