Homeசெய்திகள்சென்னைஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி

ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி

-

- Advertisement -

சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த  ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த  ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பறக்கும் படை குழுக்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

we-r-hiring

தேர்தல் விதிமுறைகளின்படி, ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது அதற்கான உரிய ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் முன்பே அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் உத்தரவின் பேரில், அருங்குளம் பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் பறக்கும் படை அதிகாரி எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ஏபி39 ஜேஎஸ் 0884 என்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கடப்பாவைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் நாகூரி சிவ பிரசாத் (32) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டுகளாக ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

முதல் கட்ட விசாரணையில், ஆந்திராவில் உள்ள தனது கடைக்காக சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காகவே இந்த பணத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை: தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல்!

MUST READ