Homeசெய்திகள்மாவட்டம்விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்... 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

-

- Advertisement -

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதுடன், பொது மக்களுக்கு இடையூறு செய்த விவகாரத்தில் தவெகவினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.விஜய் வருகையின் போது அராஜகத்தில் தவெகவினர் மீது 3 வழக்குகள் பதிவு!!பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் வருகையின் போது, பொது மக்களுக்கு இடையூறு செய்ததோடு மட்டுமல்லாமல் அராஜகத்தில் தவெகவினா் ஈடுபட்டனா்.

பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் கொடுங்கையூர் ஆரோக்கியதாசை(41) ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், தவெக மாவட்ட செயலாளர் சிவா, நிர்வாகி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

we-r-hiring

இதேபோல சிட்கோ மெயின் ரோடு டி வி கே லிங்க் முதல் தெரு  சந்திப்பில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் கணேசுக்கு வழி விடாததுடன், அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் புகார் அளித்துள்ளனா்.

மாவட்ட செயலாளர் சிவா, நிர்வாகி சௌந்தர ராஜன் உள்ளிட்டோர் மீது கொடுங்கையூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு செய்துள்ளனா்.

தண்டையார்பேட்டையை சேர்ந்த கடை உரிமையாளர் சதீஷ்குமார் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே கூடியிருந்த த வெக தொண்டர்கள், அவருக்கு வழி விடாததுடன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகார் போில் தமிழக வெற்றி கழகத்தினர் மீது எம்.கே.பி நகர் போலீசார் மூன்று பிரிவுகளில் (பெயர்கள் குறிப்பிடவில்லை) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரம்பூரில் பிரச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை – தவெக பரபரப்பு புகார்

MUST READ