வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் உயரவில்லை. பேருந்து, ட்ரக் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு கட்டணம் ஒருமுறை செல்ல 180ல் இருந்து 185 ஆகவும், ஒருமுறை சென்று மீண்டும் வர 270 ல் இருந்து 275 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டாராஸ் போன்ற கன ரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல 195ல் இருந்து 200 ஆகவும், சென்று மீண்டும் வர 295 ல் இருந்து 300 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதே போல் 4 ஆக்ஸில் இருந்து 6 ஆக்ஸில் வரை உள்ள கனரக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல 280ல் இருந்து 285 ஆகவும் மீண்டும் வர 425ல் இருந்து 430 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் OVERSIZE வாகனங்களுக்கு 340ல் இருந்து 350 ஆகவும் மீண்டும் வர 510ல் இருந்து 525 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அனைத்து கார், ஜீப் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் மாத பாஸ் ஒவ்வொரு வாகங்களுக்கும் 45 முதல் 280 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

