சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7 கோடி சிக்கியது.
சென்னை, சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அந்த வாகனத்திற்குள் ரூ. 7 கோடி பணம் இருந்தது. அந்த பணம் அரசுடமையாக்கப்ட்ட வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது தேர்தல் பறக்கும் படையினர் விசாரணையில் தெரிய வந்தது. அது குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்தல் ஆணையத்திடம் வங்கிக்கு பணம் கொண்டு செல்வதற்காக அனுமதி கடிதம் வாங்கி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து விவரங்களையும் பெற்று விட்டு அனுப்பி வைத்தனர். சோதனையில் ரூ. 5 கோடிக்கு மேல் சிக்கினால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் அது தொடர்பாக முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
