தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான பணியிடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 8, 2026 அன்று, தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உட்பட பல அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி, அந்தப் பதவிக்கு சந்தீப் மிட்டலை நியமித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு அரசியல் வட்டாரங்களில் எதிர்வினைகள் எழுந்தன. குறிப்பாக, திமுக இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இந்த எதிர்ப்பை தொடர்ந்து பரிசீலித்த தேர்தல் ஆணையம், தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெறும் முடிவை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில், டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், முன்பு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் மிட்டல் தற்போது ஆயுதப்படை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
பாஜகவின் தேர்தல் முகவராக தேர்தல் ஆணையம் செயல் படுவது துரதிர்ஷ்டவசமானது – டி.ஆர்.பாலு கண்டனம்
