மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தவறான தகவல்களை கொடுத்து நாடாளுமன்றத்தை தவறாக நடத்துகிறார்கள் என தி.மு.க எம்.பி.ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளாா்.![]()
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி.ஆ.ராசா உறையாற்றினாா். அப்போது பேசிய அவர், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த இரண்டு மசோதாக்கள் குறித்து பிரதமர் பிரதமர் மோடியும் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய முரண்பாடுகள் மக்களவையை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், வடமாநிலங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று அம்பெத்கர் முன்பே எச்சரித்திருந்தார் என்பதை ஆ.ராசா நினைவூட்டினார். அனைத்து மாநிலங்களையும் ஒரே அளவில் கருதி சட்டங்களை இயற்றுவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அம்பெத்கர் கருத்து தெரிவித்திருந்தார் என அவர் கூறினார்.
மத்திய அரசு தவறான தகவல்களை வழங்கி நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் ஆ.ராசா முன்வைத்தார். இதற்கு மாறாக, எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் மோடி உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
