அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அமைந்துள்ளது அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு. இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் ஒட்டப்பிடராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஒட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. சுந்தர்ராஜ் நேற்று முதல் பணம் கொடுப்பதாக திமுகவினர் ஒரு குற்றச்சாட்டை வெளியானதை தொடா்ந்து இன்று அதிகாலை அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் இருந்த பணத்தை வீட்டின் பின்புறம் தூக்கி வீசியுள்ளனர். அதனை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து பின்பறம் உள்ள அவரது மகன் வீட்டிலும் சோதனை நடத்த முற்பட்ட போது சுந்தர்ராஜ் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…

