Homeசெய்திகள்தமிழ்நாடுசமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

-

- Advertisement -

தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, “10 ஆண்டுகாலம் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க முடியாத பா.ஜ.க. மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சியையே தமிழ் நாடு தேர்தலில் பிரச்சாரமாக முன்னெடுத்தது.

கடந்த 50 ஆண்டுகளாகத் தீர்வு காண முடியாத தொகுதி மறுவரையறை சிக்கலை இவ்வளவு அவசரமாக பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் இணைத்து சட்டமாக்க முயற்சித்தது பா.ஜ.க. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு தென் மாநிலங்களை வஞ்சிக்கும் இம்முயற்சியை அம்பலப்படுத்தி மசோதாவை வீழ்த்தினோம்.

we-r-hiring

இந்தியாவின் மதச்சார்பின்மையைக் குலைக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தில் நாங்கள் தோற்கடித்தோம், தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள்” என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளாா்.

வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

 

MUST READ