spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

-

- Advertisement -

இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள் முன்னூறு பேரை (Local Bank Officers) பணியமர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான மையங்களைக் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மைசூரு போன்ற மையங்கள் ஒதுக்கப்பட்டன. இது தொடர்பாக 06-10-2024 அன்று இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரிக்குக் கடிதம் எழுதினேன். இதையடுத்து இனணயவழியில் அக்டோபர் 10, 2024 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 1305 பேர் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் மாநில வாரியாக, இட ஒதுக்கீடு அடிப்படையில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்டோர் வாரியாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. Cut off மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இந்திய வங்கி ஊழியர்கள் தேர்வு(IBPS) மற்றும் ஒன்றிய பொதுத்தேர்வு ஆணையம்(UPSC) போன்ற அமைப்புகள் தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களை மாநில வாரியாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் மதிப்பெண்களை வெளியிடுகின்றன. இது தொடர்பாக நான் எழுதிய கடிதத்திற்கு, இந்தியன்வங்கியின் முதன்மைப் பொதுமேலாளர் எழுதிய கடிதத்தில், இறுதிப் பட்டியலை வெளியிடும் பொழுது, இந்தியன் வங்கிஊழியர்கள் தேர்வு மற்றும் ஒன்றியப் பொதுத் தேர்வு ஆணையம் ஆகியவை கடைபிடிக்கும் நடைமுறையைப் பின்பற்றி தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்கள் மாநில வாரியாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் வெளியிடுவதாகத்தெரிவித்தார்.

we-r-hiring

ஆனால் தேர்வு நடைபெற்று எட்டு மாதங்கள் ஆன பிறகும்கூட, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்படவில்லை. இதற்குப் பிறகு தேர்வு நடவடிக்கைகளைத் துவக்கிய பல வங்கிகள் தேர்வுகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் ஆணை வழங்கிவிட்டது. அவர்கள் பணியிலும் சேர்ந்து விட்டனர். எனவே தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கிநிர்வாகம் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சருக்கும், இந்தியன் வங்கிமேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல்அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.

காற்று மாசுபாட்டால், ஆயுள்காலத்தில் 8 ஆண்டுகளை இழக்கும் டெல்லி மக்கள்!!

MUST READ