Homeசெய்திகள்சென்னைசென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் - சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் - சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்...

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

we-r-hiring

வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்புவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்திய அளவில் பார்த்தால், மொத்தம் 1110 நீதிபதி பணியிடங்களில் சுமார் 300 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மதுரை கிளையும் சேர்த்து மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இதனால் வழக்குகள் விசாரணையில் தாமதம் ஏற்பட்டு, நீதித்துறையின் செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீதிபதிகள் நியமனத்திற்காக 24 பேரின் பட்டியல் அனுப்பப்பட்டிருந்தும், இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படாதது நீதித்துறையில் பெரும் தொய்வை உருவாக்கியுள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலியாக உள்ள பணியிடங்கள் நீடித்தால், அது பொதுமக்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

MUST READ