spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு‘தி கேரளா ஸ்டோரி': உளவுத்துறை எச்சரிக்கை

‘தி கேரளா ஸ்டோரி’: உளவுத்துறை எச்சரிக்கை

-

- Advertisement -

‘தி கேரளா ஸ்டோரி’: உளவுத்துறை எச்சரிக்கை

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என உளவுத்துறை அலெர்ட் கொடுத்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி… தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை : பரபரப்பில் திரையுலகம்!!! - Update News 360

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் கேரள பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் விமர்சனத்திற்குள்ளாகி உள்ள நிலையில் மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருப்பதாகவும், சங்பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்டது படம்தான் இந்த தி கேரள ஸ்டோரி என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதனை தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

we-r-hiring

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் வருகிற 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் இத்திரைப்படத்தை வெளியிட்டால் எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதனால் இத்திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களின் பட்டியலை எடுத்து பாதுகாப்பு அதிகரிக்கலாமா அல்லது வேறு முடிவு எடுக்கலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

MUST READ