Homeசெய்திகள்மாவட்டம்செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை - ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை – ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

-

- Advertisement -

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2 வது ரயில் தடம் அமைக்கம் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பில் 68 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த தடத்தில் புறநகர் ரயில்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை - ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

we-r-hiring

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே இரண்டாவது ரயில் தடம் அமைக்கும் முக்கிய திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், சென்னை புறநகர் ரயில் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 68 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் ஒரே பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், எதிரே வரும் ரயில்களுக்கு வழிவிட பல இடங்களில் ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக வாலாஜாபாத் மற்றும் பாலூர் ரயில் நிலையங்களில், எதிரே வரும் ரயிலுக்காக மற்றொரு ரயில் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படும் சூழ்நிலை பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த புதிய இரட்டை பாதை திட்டம் அமலுக்கு வந்தால், அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் சென்னை புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வேலைக்காக தினமும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நேரச்செலவு குறைந்து, பயணம் மேலும் எளிதாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில் பாதை விரிவாக்க திட்டம், தமிழக ரயில் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள் – பரபரப்பில் மீனவர்கள்

MUST READ