காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் பூஜை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெங்கக்கல், 2 சிவப்பு கயிறு வைத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெங்கக்கல் மற்றும் 2 சிவப்பு கயிறு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலமாகும். சிவன் மலை கோயிலின் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளை முன்னதாகவே உணர்த்துவது இதன் நோக்கம்.
பக்தர் ஒருவர் கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து குறிப்பிட்ட பொருளை கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வார் என்பது ஐதீகம். அப்படி கனவு வரப்பெற்ற பக்தர் கோயிலுக்கு வந்து கூறும் தகவலை அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பார். வெள்ளைப் பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் கண்ணாடி பேழையில் வைத்து பூஜை செய்யப்படும்.
இந்நிலையில் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி என்ற பக்தரின் கனவில் உத்தரவான வெங்கக்கள் மற்றும் 2 சிவப்பு கயிறு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.