- Advertisement -
மழை காரணமாக கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழல்
தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் ரம்மியமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசு என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மலையும் அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் அங்கு 22 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக கொடைக்கானல் முகப்பு பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, அஞ்சு வீடு அருவி, கரடி சோலை அருவி உட்பட பல்வேறு அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வழக்கமாக கோடை காலத்தில் இருப்பதைவிட தற்போது கொடைக்கானலில் இதமான சூழல் நிலவுவதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


