Homeசெய்திகள்கட்டுரை”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

-

- Advertisement -

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

we-r-hiring

சுப.வீரபாண்டியன்

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதையும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதையும் பார்க்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதிப்பதன் மூலம், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவமதிக்கிறார்கள் என்பதுதான் உண்மை!

“நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். ஆனாலும், ஆளுநர் மாளிகையில் விழா நடைபெறுவதால், அந்த மரபைத்தான் பின்பற்றுவோம்” எனக் கூறிவிட்டார்கள் என்கிறார் ஓர் அமைச்சர்! ஆளுநர் மாளிகை எங்கே இருக்கிறது….? உத்தரப்பிரதேசத்திலா, பீகாரிலா? தமிழ்நாட்டில்தானே இருக்கிறது! தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு விழாவில், தமிழையும். தமிழர்களையும் அவமதிக்க அனுமதிப்பது எப்படிச் சரியாகும்.

இது ஒருபுறமிருக்க, முதலில் பாடப்படும் வந்தே மாதரம் பாடலின் வரலாறு என்ன, அது தேச விடுதலைக்கு அல்லது தேச ஒற்றுமைக்கான பாடலா என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது!

”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”

வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்பவரால் 1882இல் எழுதி வெளியிடப்பட்ட, “ஆனந்த மடம்” என்னும் நூலில் இடம் பெற்றிருக்கும் பாடலே இந்த வந்தே மாதரம்! 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற, இஸ்லாமியர்களுக்கு எதிரான, சன்னியாசிகளின் புரட்சி என்னும் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே அந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது!

இந்துமத வைணவத் துறவியான சத்யானந்தா, பிற துறவிகளுடன் இணைந்து, இஸ்லாமியரிடமிருந்து வங்காளத்தைக் கைப்பற்றுவதற்கான வன்முறைப் போராட்டங்களைக் கையில் எடுக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவருடைய சீடர் பவானந்தா அந்த வன்முறைப் போராட்டத்தைத் தொடர்கிறார்!

இஸ்லாமியர்களின் மீது அவர்கள் தொடுத்த ஆயுதப் போராட்டத்தில், இஸ்லாமியர் பலர் படுகொலை செய்யப்படுகிறார்கள். அந்த நேரத்தில், இந்து சன்னியாசிகள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். அப்போது அவர்கள் பாடும் பாடல்தான் வந்தே மாதரம்! அதனை “ஆனந்த கீதம்” (Abbey of bliss) என்று அழைக்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி!

அந்தப் பாடலின் முதல் இரு பத்திகள் (paragraphs )பொதுவானவையாக இருந்தாலும், அடுத்தடுத்து வரும் சரணங்கள் அனைத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது!

இதன் காரணமாக இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, இந்தப் பாடலைப் பாடுவதற்கு முஸ்லிம் லீக் கட்சியினரும், மதச்சார்பின்மையை வலியுறுத்தும் ஜனநாயகவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தியா என்பது இந்துப் பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி ஆகியோரோடு சமமாக வைத்துப் பேசப்படுகிறது! (Tvah hi Durga Dashapraharana Dharamini).”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”இதனையொட்டி, அந்தப் பாடலைக் காங்கிரஸ் கூட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாடலாமா என ஆராய்வதற்கு, 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நேரு தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அக்குழு “வந்தே மாதரம் பாடலில், முதல் இரண்டு பத்திகளை மட்டும் வேண்டுமானால் பாடலாம். கீழே வரும் பகுதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதால், அவற்றைப் பாட வேண்டியதில்லை என்று அறிவித்தது!

1938ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, சட்டமன்ற அவைத் தலைவர் புலுசு சாம்பமூர்த்தி அந்தப் பாடலை பாட அனுமதித்தார். அப்போதும் அதனை எதிர்த்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்!

ஆனந்த மடம் நாவலின் எட்டாவது அத்தியாயத்தில், முஸ்லிம்களைக் கொல்லுங்கள் என்று ஒரு முழக்கம் வருகிறது அதைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடல் பாடப்படுகிறது!

இது மட்டுமல்லாமல், அந்தப் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி, “ஆங்கிலேயர்களின் உதவியோடு நாம் முஸ்லிம்களை வேரறுக்க வேண்டுமே அன்றி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டியது இல்லை” என்றும் வெளிப்படையாகக் கூறியவர்! எனவே வந்தே மாதரம் என்பது தேச விடுதலைக்கான பாடலோ, தேச ஒற்றுமைக்கான பாடலோ இல்லை என்பது தெளிவாகிறது!

உண்மைகள் இவ்வாறிருக்க, கடந்த நவம்பர் மாதம் முதல் ஓராண்டிற்கு எல்லா அரசு விழாக்களிலும் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்லி இருப்பதை, இங்கே இருக்கிற ஆளுநர்கள் வேண்டுமானால் தலையில் வைத்துக் கொண்டாடலாம்! ஆனால் தமிழர்கள் ஒரு நாளும் இதனை ஏற்க மாட்டார்கள்! வந்தே மாதரம் என்பது வாழ்த்துப் பாடல் இல்லை, மத ஒற்றுமைக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பாடல்!

மகேந்திரனின் மரணம் செய்தி அல்ல… எச்சரிக்கை! விழுங்கத் தயாராகும் தவெக… விழிக்குமா அதிமுக?

MUST READ