spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு

-

- Advertisement -

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிபதி எச்.எஸ்.வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi - ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் எம்.பி பதவியும், அரசு பங்களாவும் பறிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

we-r-hiring

இந்நிலையில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் தலைமை நீதித்துறை நடுவராக இருந்த நீதிபதி எச்.எஸ்.வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ