Homeசெய்திகள்சென்னைபரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!

பரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக – காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!

-

- Advertisement -

காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஜூன் 5, 2026) அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே திடீர் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

பரபரப்பு: காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; தள்ளுமுள்ளு!மறைந்த தலைவர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் காலை முதலே அவரது நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

we-r-hiring

முன்னதாக, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு நேரில் வருகை தந்து, மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டுச் சென்றார்.

முதலமைச்சர் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில், நினைவிடத்திற்குள் அஞ்சலி செலுத்தச் சென்ற திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இடையே முன்னுரிமை பிடிப்பதிலும், வரிசையில் செல்வதிலும் திடீரென வாக்குவாதம் வெடித்தது.இரு தரப்பினரும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது கட்சி ஆதரவு முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சூழல் சூடானது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு கட்சியினரும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.

நினைவிட வளாகத்தில் நிலவிய பதற்றமான சூழலை உணர்ந்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், உடனடியாக இரு தரப்பிற்கும் இடையே புகுந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தியதை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தலைவரின் நினைவிடத்தில் கூட்டணி கட்சிகளாக அறியப்படும் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு மத்தியில் இவ்வாறு மோதிக்கொண்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ