spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா'- காரணம் என்ன தெரியுமா?

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா’- காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா'- காரணம் என்ன தெரியுமா?
File Photo

ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா பெறும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

we-r-hiring

அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு அடுத்த படியாக, அதிகளவு கச்சா எண்ணெய்யை உற்பத்திச் செய்யும் நாடாக ரஷ்யா விளங்குகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் உற்பத்தியில், சுமார் 10% எண்ணெய்யை ரஷ்யா உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

“நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

இந்த நிலையில், உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயரத் தொடங்கியது. இதையடுத்து, ரஷ்யாவைத் தண்டிக்கும் விதமாக, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிறுத்திக் கொண்டனர்.

இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்தனர். எனினும், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி, 1.20 கோடி பீப்பாய்களை இறக்குமதி செய்த இந்தியா, கடந்த ஏப்ரல் மாதம் வரை, இதுவரை இல்லாத அளவாக 5.90 கோடி பீப்பாய்களை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 42%- யை ரஷ்யா பூர்த்திச் செய்து வருகிறது. இதனால் அமெரிக்க எண்ணெய் சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரபடி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு 12% ஆக இருந்த நிலையில், தற்போது 3% ஆக குறைந்துள்ளது.

ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு; 109 பேர் மரணம்

சலுகை விலையில் வழங்குவதால், அமெரிக்காவை விடுத்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. 8 முதல் 13 டாலர்கள் தள்ளுபடி விலையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்கா- ரஷ்யா இடையேயான பிரச்சனை காரணமாக, இந்தியா பயன்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ