spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்"- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

“நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

-

- Advertisement -

 

"நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்"- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி
RAJ BHAVAN, TAMIL NADU

ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை; காலாவதியான கொள்கைகளைக் கொண்டு ‘திராவிட மாடல்’ என்ற அரசியல் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரே நாடு என்ற கொள்கையைப் பிரதிபலிக்காததுதான் திராவிட மாடல். ஆளுநர் மாளிகை நிதிச் செலவினங்களில் விதிமீறல் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அப்பட்டமான பொய்.

we-r-hiring

ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை அனுப்பப்பட்ட மசோதாவிலும் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்பது விதிகளுக்கு எதிரானது என்பதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.

“வங்கக்கடலில் புயல் உருவாகிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தருமபுரம் ஆதீனத்தைக் காணச் சென்ற தன்னுடைய வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. அதில் தொடர்புடையவர்கள் ஆளுங்கட்சியினர் என்பதால், முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவுச் செய்யப்படவில்லை. கல்வியின் தரம் குறைந்து விட்டதால், தமிழக மாணவர்கள் சிவில் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறைந்துவிட்டது. நான் அதிகாரத்தை மீறுகிறேன் என்பது தவறான பரப்புரை. தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மதிப்புள்ளது; அவர் சிறந்த மனிதர்” என்று கூறியுள்ளார்.

MUST READ