Homeசெய்திகள்மாவட்டம்”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!

”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த வேளாண் அறிவியல் பாடப் பிரிவு இந்தக் கல்வியாண்டு முதல் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!

மதுரை – அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978 முதல் மேல்நிலைப் படிப்பில் இருந்த வேளாண் அறிவியல் பாடப் பிரிவு இந்தாண்டு முதல் நீக்கம். 10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிகம் தேர்வு செய்து வந்த இந்தப் பாடப் பிரிவில், இந்த ஆண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. கடந்த 36 ஆண்டுகளாக வேளாண் அறிவியல் பாடத்தை கற்பித்து வந்த ஆசிரியர் முருகேஸ்வரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய ஆசிரியர் நியமிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

we-r-hiring

இதனால், இந்த ஆண்டில் வேளாண் அறிவியல் பிரிவில் சேர எதிர்பார்த்திருந்த மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், தற்போது அதே பிரிவில் பிளஸ் 2 படித்து வரும் 35 மாணவர்களின் கல்வி தொடர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. புதிய ஆசிரியரை உடனடியாக நியமித்து, வேளாண் அறிவியல் பாடப் பிரிவை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…

MUST READ