Homeசெய்திகள்மாவட்டம்ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…

ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…

-

- Advertisement -

சேலம் மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…

சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மீது, பல பெண்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக பதிவு செய்து பின்னர் மிரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சில பெண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றதாகவும், அவர்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இதுதொடர்பாக சேலம் அருகே நெய்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், மணிகண்டன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்களை ஏமாற்றி மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் ஒருவரின் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், நிதி உதவி செய்வதாக அறிமுகமான மணிகண்டன் பின்னர் தொடர்ந்து தொடர்பில் இருந்து நெருக்கம் வளர்த்துக் கொண்டதாகவும், பின்னர் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த ஆடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மணிகண்டனின் வீட்டில் சோதனை நடத்தி, அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட மொபைல் போன் மற்றும் அதில் இருந்ததாக கூறப்படும் டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!

MUST READ