Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

-

- Advertisement -

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஜூன் மாதத்திற்கான 9.1 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 31.2 டிஎம்சி என மொத்தம் 40 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

we-r-hiring

இந்த கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக மொத்தம் 40 டிஎம்சி காவிரி நீர் தேவைப்படுவதாக தமிழக அரசு வலியுறுத்தியது. மேலும், கோடை காலத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிக நீரை கர்நாடகா பயன்படுத்திவிட்டு, தற்போது நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தனது தரப்பை முன்வைத்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து, 40 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகம் – அண்ணா பிறந்தாநாளில் தொடக்கம்!

MUST READ