
“முதலாமாண்டு பி.இ/ பி.டெக்/ பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023- 24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கைப் பெற www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் இன்று (மே 05) முதல் விண்ணப்பிக்கலாம்.
முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!
OC, BC, MBC, BCM, DNC ஆகிய பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் ரூபாய் 500 ஆகவும், SC, SCA, ST பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் ரூபாய் 250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணத்தை மாணவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யூபிஐ இணையதள வாயிலாக செலுத்தலாம். பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 4- ஆம் தேதி கடைசி நாளாகும்”. இவ்வாறு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.