“அத்தியாவசிய பொருளான ஆவின் பால் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூன் 30) கள ஆய்வு மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் வருமாறு,

”தங்குதடையின்றி பால் கிடைக்க வேண்டும்”
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் சரிவடைந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்துப் பேசிய அவர், “அப்படி எதுவும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எது எப்படியாக இருந்தாலும், பால் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தும் மிக முக்கியமான அத்தியாவசியப் பொருளாகும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு எந்தவித தட்டுப்பாடோ அல்லது குறையோ இல்லாமல், பால் தங்குதடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
”சட்ட ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு அடக்குக!”
தமிழகத்தின் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய பிரேமலதா, “மாநிலத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களும், போதை கலாச்சாரமும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், இந்த அராஜகச் சம்பவங்களை உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” எனத் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
உங்க ஆட்சியையும் டிஸ்மிஸ் பண்ண ஊழியர்கள் தயார்” – அமைச்சர் மிரட்டலுக்கு டாஸ்மாக் சங்கம் பதிலடி
