Homeசெய்திகள்தமிழ்நாடுமன்னராட்சியா, மக்களாட்சியா?" – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: "ஆட்சியைக் காப்பாற்ற...

மன்னராட்சியா, மக்களாட்சியா?” – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: “ஆட்சியைக் காப்பாற்ற ஆள் பேர அரசியல்” எனச் சாடல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்து 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை என்றும், தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க ‘ஆள் பேர அரசியல்’ மற்றும் ‘குதிரை பேரம்’ மட்டுமே அரங்கேறி வருவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.மன்னராட்சியா, மக்களாட்சியா?" – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: "ஆட்சியைக் காப்பாற்ற ஆள் பேர அரசியல்" எனச் சாடல்!

​சினிமா வேறு, நிஜ பாடம் வேறு!
​செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “தேர்தலுக்கு முன்பு அரசியலில் ஆத்திச்சூடி படித்துக்கொண்டு, 234 தொகுதிகளிலும் ‘உங்கள் விஜய்’ என்று மெட்டு போட்டு, பாட்டுப் பாடி அரியணையில் அமர்ந்தார். ஆனால், அவர் நடித்த படமும், இப்போது தமிழ்நாட்டுக்கு அவர் நடத்துகின்ற பாடமும் வேறுவேறாக இருக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டை நாட்டு மக்கள் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்” என்றார். ​மேலும், தமிழ்நாட்டின் தற்போதைய நிலையை அரியணையில் அமர்வதற்கு முன்பு, அமர்ந்த பின்பு என ‘கி.மு, கி.பி’ போலப் பிரித்துப் பார்க்கும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

we-r-hiring

​தேர்தல் நாடகமும், தற்போதைய அரசாணைகளும் (முன்பு Vs பின்பு):
​விஜய் அரசின் முரண்பாடுகளைப் பட்டியலிட்டு ஆர்.பி. உதயகுமார் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள், தேர்தலுக்கு முன்பு விவசாயக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசியது என்ன? இப்போது வெளியிட்டிருக்கும் அரசாணை என்ன? நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டமே இதற்குச் சாட்சி. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அப்போது பேசியதற்கும், இப்போது நடப்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? கன்னியாகுமரி அணு கனிமச் சுரங்கம் தொடர்பாக அன்று போட்ட தீர்மானம் என்ன? இன்று அரசு வெளியிட்டுள்ள அரசாணை என்ன?

துப்புரவுப் பணியாளர்களைத் தனியார்மயமாக்குவதை அன்று ஆதரித்துவிட்டு, இன்று அரசு எடுத்த முடிவுக்கு மக்கள் போராடிய பிறகே வாபஸ் வாங்கியுள்ளனர். அரசுப் பணி நியமனங்களிலும் பெரும் குளறுபடிகள் நடக்கின்றன. “மக்களாட்சியா, மன்னராட்சியா?” என்று மேடையில் கேட்ட விஜய், இன்று தனது ஆஸ்தான ஜோதிடர், தயாரிப்பாளர், ஆலோசகர், நண்பர் என அத்தனை பேருக்கும் அரசுப் பதவிகளை அள்ளி அள்ளி வழங்கி வருகிறார்.

​தமிழ்நாட்டில் நடப்பது ‘ஆடு, மாடு பேரம்’ போன்ற ஆள் பிடிக்கும் அரசியல்!
​த.வெ.க ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை அதிரடியாகத் தூக்கும் ‘குதிரை பேரம்’ தமிழ்நாட்டில் நடப்பதாக அவர் சாடினார். ​”கிராமத்துச் சந்தைகளில் ஆடு, மாடு வாங்குபவர்கள் கையில் துண்டைப் போட்டுப் பேரம் பேசுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இன்று அரியணையைக் காப்பாற்ற முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் ‘ஆள் பேரம்’ நடத்துவது அதிர்ச்சியைத் தருகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களின் அடிவயிறு பற்றி எரிகிறது. இந்த ஆள் பிடிக்கும் அரசியல் சட்டப்படியும், தர்மப்படியும் ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது” என ஆர்.பி. உதயகுமார் சாடினார்.

​விஜய்க்குப் பேரிடி கொடுத்த தேர்தல் ஆணையம்!
​அண்மையில் நடந்த த.வெ.க-வின் ஆள்சேர்ப்பு விழாவில் தொண்டர்கள் புறக்கணிப்பு, பிரியாணி அரசியல் எனப் பெரும் கூத்து நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரே ஆறுதல் தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் என்றார்.​”பிகார், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டின் இடைத்தேர்தலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் ஆள் பேர, குதிரை பேர அரசியல் ஆரோக்கியமானது அல்ல என்பதை உணர்ந்தே தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. ​தன் இலக்கை எட்ட 12 எம்.எல்.ஏ-க்களைக் காலி செய்ய வைத்து, அதிரடி அரசியல் நடத்தத் தயாராக இருந்த முதல்வர் விஜய்க்கு, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஒரு ‘பேரிடியாகவும்’ தடுமாற்றமாகவும் அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

​50 நாட்களில் சாதித்தது என்ன?
​இறுதியாக, நாட்டின் தூண்களான இளைய சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்த அவர், “முதலமைச்சர் அரியணையில் அமர்வதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் விஜய் என்ன செய்தார்? எதுவும் இல்லை. சரி, அரியணையில் அமர்ந்த இந்த 50 நாட்களிலாவது மக்களுக்கு என்ன செய்தார்? அதுவும் தெரியவில்லை. த.வெ.க ஆட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்வதிலேயே அவரது கவனமும் கவலையும் சுற்றி வருகிறதே தவிர, மக்கள் நலனில் இல்லை” என ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்

MUST READ