Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் கூட்ட நெரிசல் மரணம்: அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக...

கரூர் கூட்ட நெரிசல் மரணம்: அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

-

- Advertisement -

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்த நீதிமன்ற விபரங்கள் வருமாறு:
கரூர் கூட்ட நெரிசல்

அவசர வழக்கு கோரி முறையீடு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ (CBI) விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு சார்பில் அரசு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

we-r-hiring

அரசு வேலை வழங்கும் இந்த நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த மனுவை இன்று (08.07.2026) அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் எழுப்பிய கேள்வி
இந்த முறையீட்டைப் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, “இந்தச் சம்பவம் தொடர்பான முக்கிய வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே? அப்படி இருக்கும்போது இந்த கோரிக்கையையும் அங்கேயே முறையிடலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.
​மேலும், இந்த விவகாரத்தை தற்போதைய சூழலில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்த நீதிபதிகள், “சாதாரண சட்ட நடைமுறையைப் பின்பற்றி, இதனை வழக்கமான மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்; பின்னர் அது முறைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று அறிவுறுத்தினர்.

உச்ச நீதிமன்ற மற்றும் சிபிஐ விசாரணையைக் காரணம் காட்டி, அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ