Homeசெய்திகள்தமிழ்நாடுபனகல் அரசர் பிறந்தநாள்: "அவரது சீர்திருத்தங்களே சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளம்!" – முதல்வர் ஜோசப்...

பனகல் அரசர் பிறந்தநாள்: “அவரது சீர்திருத்தங்களே சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளம்!” – முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம்!

-

- Advertisement -

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவருமான பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவருக்குத் தனது டுவிட்டர் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
பனகல்

இதுதொடர்பாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
​”சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

we-r-hiring

நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு மிகவும் வலுவான அடித்தளமாக அமைந்தன.

கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்குடைய நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் நமக்கு வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன. பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்!”
​இவ்வாறு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது பதிவில் பனகல் அரசரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலப் பணிகளைப் போற்றித் தன் மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

MUST READ