Homeசெய்திகள்தமிழ்நாடுபொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்!

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்!

-

- Advertisement -

​போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மாணவர்கள் பங்கேற்பு; அமைப்பின் புதிய கொடி அறிமுகமாகிறது.

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்!

we-r-hiring

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ (We the leaders) அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை தலைமையில், அவ்வமைப்பின் முதலாவது மாநில மாநாடு பொள்ளாச்சியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

​35 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல்
‘போதை இல்லா விழிப்புணர்வு’ என்ற முக்கியக் கொள்கையை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை கடந்த ஜூலை 2-ம் தேதி போடப்பட்டு, கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 35 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுத் திடல் தயாராகி வருகிறது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தலும், 25 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கான (Parking) வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

​அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள்
லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில், அவசரத் தேவைகளுக்காக 4 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 நடமாடும் கழிவறைகள் (Mobile Toilets) உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களைக் கவரும் வகையில் ‘வீ த லீடர்ஸ் செல்பி பாயிண்ட்’ அமைப்பும் மாநாட்டுத் திடலில் உருவாக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்!

​மாநாட்டின் முக்கிய அம்சங்கள்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் இந்த மாநாட்டில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ​போதைப்பொருள் விழிப்புணர்வுக்கான ‘பிராண்ட் அம்பாசிடர்கள்’ அறிமுகம்.
  • ​போதை ஆதிக்கத்திலிருந்து மீண்ட குடும்பங்களின் நெகிழ்ச்சியான வாழ்வியல் அனுபவப் பகிர்வு.
  • ​போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்துப் பிரபல மருத்துவர்களின் மருத்துவ விளக்க உரைகள்.
  • ​போதை விழிப்புணர்வு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் போதை கலாச்சாரத்தை ஒழிப்பதை வலியுறுத்தும் பிரத்யேக ஓவியக் கண்காட்சி.

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்!

​புதிய கொடி அறிமுகம்
இந்த மாநாட்டின் மிக முக்கிய நிகழ்வாக, லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பிற்கான புதிய கொள்கைக் கொடியை அண்ணாமலை அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

​விழிப்புணர்வுப் பயணம்
மாநாட்டின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தஞ்சாவூரிலிருந்து நேற்று புறப்பட்ட இளைஞர்கள் குழுவினர் மிதிவண்டி (சைக்கிள்) மூலம் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று மாரத்தான் ஓட்டம் மூலமாகவும் ஏராளமான இளைஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். மாநாட்டிற்கான இறுதிப்பணிகள் பொள்ளாச்சியில் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

125 முதல்வர் பணியிடங்கள் காலி: அரசு கல்லூரிகளின் சீரழிவு தொடரக் கூடாது! – அன்புமணி..

MUST READ