ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை விளக்கம்
சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர்.என். ரவி பழிவாங்கும் நோக்குடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்ஷிகர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருவர் கன்னி பரிசோதனை செய்துதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் டிஜிபி அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மை தன்மையை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்களை திரட்டிய பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை திருமண சட்டப்படி நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரையின் படி இரண்டு சிறுமிகளுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதாகவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அவர்களை இருவரும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அந்த சிறுமியை தற்கொலை செய்யும் முறை என்பது பொய்யான தகவல் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.


