அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்
தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில் புகார் செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஆயிஜா என்ற இடத்தில் தலையில் அடிபட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு அனுப்பிய சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியினருக்கு ஏழு வயது பிரவீன் சவுத்ரி என்ற மகன் உள்ளார். வம்சி கிருஷ்ண தம்பதியினர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக அயிஜாவுக்கு வந்தனர்.
முசிறி அருகே கொலை – போலீஸ் வலை வீச்சு
இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியின்போது பிரவீன் சவுத்ரி விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளான். இதில் பிரவீன் சவுத்ரி இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
காயம் ஆழமாக இருந்த நிலையில் தையல் போடுவதற்கு பதிலாக மருத்துவமனை ஊழியர்கள் அதை ஃபெவிக்யுக் மூலம் ஒட்டி தையல் இல்லாமல் அனுப்பினார்கள். இதைக் கவனித்த தந்தை வம்சிகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் நாகார்ஜுனாவிடம் விசாரித்தபோது, ஊழியர்கள் தவறு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனால் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் வம்சி கிருஷ்ணா ஈடுப்பட்டபோது சிறுவன் பிரவீனுக்கு ஏதேனும் நடந்தால் நானே பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார். மருத்துவமனையின் அலட்சியம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அய்ஜா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்.ஐ. நரேஷ்குமார் தெரிவித்தார்.
