Homeசெய்திகள்இந்தியாநிலுவை போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி - கர்நாடக அரசின் முக்கிய அறிவிப்பு

நிலுவை போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி – கர்நாடக அரசின் முக்கிய அறிவிப்பு

-

- Advertisement -

கர்நாடகாவில் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் (e-challan) அபராதங்களுக்கு கர்நாடக அரசு 50% தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு நிலுவைத் தொகையை எளிதாகச் செலுத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.நிலுவை போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி - கர்நாடக அரசின் முக்கிய அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் (e-Challan) அபராதத் தொகைகளை வசூலிக்கும் நடவடிக்கையை எளிதாக்கும் வகையில், மாநில அரசு முக்கிய சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீண்ட காலமாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

we-r-hiring

இந்த சலுகையின் மூலம், வாகன ஓட்டிகள் தங்களின் நிலுவை அபராதத் தொகையில் பாதி தொகையை மட்டும் செலுத்தி வழக்குகளை முடித்துக்கொள்ள முடியும். இதனால் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

அபராதத் தொகையை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவல்துறையின் அதிகாரப்பூர்வ செயலி (KSP App) மற்றும் பெங்களூரு போக்குவரத்து காவல்துறையின் BTP ASTraM செயலி ஆகியவற்றின் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களின் அபராதத் தொகையை எளிதாகச் செலுத்தலாம்.

மேலும், இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது நேரடியாகச் செலுத்த விரும்புபவர்கள், தங்களின் வாகன பதிவு எண்ணை வழங்கி அருகிலுள்ள போக்குவரத்து காவல் நிலையம் அல்லது போக்குவரத்து மேலாண்மை மையங்களில் அபராதத் தொகையை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 50 சதவீத தள்ளுபடி சலுகை, காவல்துறையின் இ-சலான் அமைப்பில் பதிவாகியுள்ள அபராதங்களுக்கும், போக்குவரத்து துறை (RTO) தொடர்பான பழைய வழக்குகளில் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கும் பொருந்தும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகன ஓட்டிகள் இந்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் நிலுவை அபராதங்களை விரைவாகச் செலுத்துமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!

MUST READ