திமுக இளைஞரணி சார்பில் 1000 குளங்கள் சீர் அமைப்பு
நீர் நிலைகளை பாதுகாப்பதை இயக்கமாக முன்னெடுத்து பொதுமக்கள் அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் 1.6 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கோதண்டராமன் கோவில் குளம் திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பெடி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்கள்.


இந்த விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கொரோனா பரவலால் உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொதுச் சுகாதார அவசரநிலை பிரகடனம் விலக்கி கொள்ளப்படுவதாக உலக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
அதனால் இனி அச்சம் அவசியம் இல்லை என்றாலும் கூட்டம் கூடும் போது முகக் கவசம் அணிவது தனிமனித பாதுகாப்பை கடைப்பிடித்தல் முக்கியமானது என்றார்.
“தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிதம்பரத்தில் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லியிருப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது என்றும் மருத்துவ அறிக்கையில் இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.
இதைக் கூட பார்க்க இயலாத ஆளுநர் தமிழக அரசின் செயல்பாட்டை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கிறார் என மா.சு., விமர்சித்தார்.
இனி ரேசன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம்
அமைச்சர் உதயநிதி
அனைத்து நாடுகளிலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடிப் பழக்கப்பட்டிருந்தாலும் அவரது சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் மட்டும் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என வேடிக்கையாக குறிப்பிட்டார்.
பொதுமக்கள் நீர் நிலைகளை பாதுக்காப்பதை இயக்கமாக முன்னெடுத்து அரசிற்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

திமுகவில் இளைஞர் அணி செயலாளராக தாம் பதவியேற்றதும் இளைஞர் அணியின் முதல் பணியாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார். திமுக இளைஞரணி சார்பில் 1000 குளங்களை சீர் செய்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


