Homeசெய்திகள்மாவட்டம்செஞ்சியில் தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

செஞ்சியில் தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைத் தாக்கிய தவெக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரரைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செஞ்சியில்

we-r-hiring

செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செஞ்சி அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்றிணைந்து கலந்துகொண்டனர். சோளிங்கர் தவெக சட்டமன்ற உறுப்பினர் கபிலன் மற்றும் அவரது சகோதரர் தளஞ்செழியன் தலைமையிலான கும்பல் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புக் தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற செஞ்சி ஆர்ப்பாட்டத்தில், தவெக எம்எல்ஏவின் செயலைக் கண்டித்து கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தமிழக அரசு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்றும், உடனடியாக ‘பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டத்தினை’ நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“எங்களுக்கு அரசியலில் பகைமுரண் ஆர்.எஸ்.எஸ் – பாஜக மட்டுமே”: மு.வீரபாண்டியன் பேட்டி!

MUST READ