Homeசெய்திகள்ஆவடிஆவடி மாநகராட்சி: தூய்மைப் பணியாளர்கள் உணவில் பல்லி! தனியார் கேட்டரிங் உரிமையாளர் மீது 4 பிரிவுகளில்...

ஆவடி மாநகராட்சி: தூய்மைப் பணியாளர்கள் உணவில் பல்லி! தனியார் கேட்டரிங் உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவைத் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம், ஆவடி சின்னம்மன் கோவில் அருகே சமையல் கூடம் அமைத்து ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கி வருகிறது.

ஆவடி

we-r-hiring

சாம்பாரில் கிடந்த பல்லி – 45க்கும் மேற்பட்டோர் பாதிப்பு:

வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்கள் காலை உணவை அருந்தியுள்ளனர். அப்போது, மண்டலம் 3-க்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் சாம்பாரில் பல்லி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உணவை உட்கொண்ட 45-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ சிகிச்சை விவரங்கள்:

  • உள்நோயாளிகள்: வசந்தா, எமிலி, விஜயலட்சுமி, குமார் ஆகிய 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர்.

  • புறநோயாளிகள்: மற்ற அனைவரும் புறநோயாளிகள் பிரிவில் முதலுதவி சிகிச்சை பெற்று அன்றே வீடு திரும்பினர்.

உணவு மாதிரி பரிசோதனை & காவல் துறை நடவடிக்கை:

  • போலீசார் வழக்குப்பதிவு: பாதிக்கப்பட்ட பணியாளர்களுள் ஒருவரான குமார் அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்பிரிவு 59 உட்பட 4 சட்டப் பிரிவுகளின் கீழ் தனியார் கேட்டரிங் உரிமையாளர் ஸ்ரீஹரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட உணவுகள்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு 16 உணவு மாதிரிகளைச் சேகரித்தனர். இவை பரிசோதனைக்காகச் சென்னை (கிண்டி) மற்றும் திருநெல்வேலி (பாளையங்கோட்டை) ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி எச்சரிக்கை:

ஆய்வகச் சோதனை முடிவுகள் வந்த பிறகு, தயாரிப்பில் தவறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வலுவிழக்க பா.ஜ.க.வே காரணம்!” — வி.சி.க. எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் அதிரடி!

MUST READ