spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

-

- Advertisement -

 

டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
Twitter Image

சென்னையில் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார்.

we-r-hiring

திருமணத்திற்கு மதம் மாறினேனா!?… கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எதிர்த்து தர்மயுத்தத்தை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

அதன்பிறகு, கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து வழிநடத்தி வந்தனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குகளைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களை அணி திரட்ட களமிறங்கியுள்ளார்.

நெடுவரம்பாக்கம் கிராமத்தில் கொலை சம்பவம் பரபரப்பு

அந்த வகையில், இன்று (மே 08) இரவு 07.30 மணியளவில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சென்றனர். தனது வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வாசல் வரை வந்து டிடிவி தினகரன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்படத் தயார் என ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அடுத்தடுத்து சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லையில் மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ள நிலையில், டிடிவி தினகரனை மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

ஆக்சன் கிங் உடன் சண்டை செய்யும் விஜய்… ‘லியோ’ லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த 2017- ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ