Homeசெய்திகள்மாவட்டம்பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - மருத்துவமனையிலும் தொடரும்...

பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்!

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களின் குறுக்கே குழாய் (Pipeline) பதிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 4-வது நாளாகப் போராட்டம் நீடித்த நிலையில், காவல்துறையினர் விவசாயிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை மருத்துவமனையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்!

ஐ.டி.பி.எல். (IDPL) நிறுவனம் சார்பில் விவசாய நிலங்கள் வழியாகக் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வெங்காயம், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள சுமார் 70 கி.மீ தொலைவிலான விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாய நிலங்களின் நடுவே குழாய் பதிக்கப்படுவதால் நிலத்தின் மதிப்பு முற்றிலும் வீழ்ச்சியடைவதுடன், எதிர்காலத்தில் நிலங்களை விற்கவோ, கால்நடைப் பண்ணைகள் அமைக்கவோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தவோ முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விளைநிலங்களைப் பாதிக்காத வகையில் இந்தக் குழாய் பாதையைச் சாலையோரத்திற்கு (Road Route) மாற்றி அமைத்துத் தர வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றைக் கோரிக்கையாகும்.

we-r-hiring

பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்!

காவல்துறையினர் கைது & மருத்துவமனையில் போராட்டம்
விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 4 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தங்களது நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை மருத்துவமனையிலேயே தொடர் உண்ணாவிரதப் போராடத்தைத் தொடரப்போவதாக விவசாயிகள் உறுதியளித்துள்ளனர்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே, இப்பிரச்சினை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்தில் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, இன்று மாலையில் மாவட்ட ஆட்சியருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்குச் சுமூகமான மற்றும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

பழனி கோயில் நில முறைகேட்டு வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

MUST READ