Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! - 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர்...

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!

-

- Advertisement -

தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளுக்கு எதிராகக் காவல் துறை நடத்திய தீவிர அதிரடிச் சோதனையில் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! - 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!

52,000-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் தீவிர விசாரணை
காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் குற்றச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தச் சிறப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான நாட்களின் போது, மாநிலம் முழுவதும் உள்ள 52,279 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட 1,577 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

we-r-hiring

3,288 பிடியாணைகள் நிறைவேற்றம்
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (NBW) நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையும் இத்துடன் சேர்த்துத் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 3,288 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு
மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகரக் காவல் ஆணையாளர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் காவல் துறைத் தலைமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், வழக்கமான சோதனைகள் மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களைத் தொடக்கத்திலேயே தடுத்துச் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வைச் சரி செய்ய வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: சேலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் வலியுறுத்தல்!

MUST READ