சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மேட்டு மாரியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமரிசையாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. முதுகில் அழகு குத்தியும், வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்; திரண்ட பொதுமக்கள்! இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
பூச்சாட்டுதலுடன் தொடங்கிய ஆடித்திருவிழா
பிரசித்தி பெற்ற மேட்டு மாரியம்மன் திருக்கோவிலின் ஆடி மாத திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழா நாட்களின் போது தினந்தோறும் அம்மனுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள், அம்மன் திருவீதி உலா மற்றும் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடும் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வந்தன.

சரபங்கா ஆற்றங்கரையிலிருந்து கரகம் எடுத்தல்
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலையிலேயே புனித நீராடிய பக்தர்கள் சரபங்கா ஆற்றங்கரைக்குச் சென்றடைந்தனர். அங்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகக் கோவிலை நோக்கி வந்தது.
கரகம் ஊர்வலத்தின் போது, திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தப் பல்வேறு விசித்திரக் கோலங்களில் வந்தனர் முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துதல். எலுமிச்சை, இளநீர் மற்றும் உரல் உள்ளிட்டப் பொருட்களை உடம்பில் அலகாகக் குத்திக்கொண்டு வருதல். சங்கிலியால் கட்டப்பட்ட சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை உடம்பில் அலகு குத்தி இழுத்து வருதல். பக்தர்களின் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் பக்திப் பரவசக் காட்சிகள் அங்குத் திரண்டிருந்த மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தின.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து வழிபாடு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின், கோவில் பூசாரி மலர்க்கரகம் ஏந்தி முதன்முதலாகத் தீக்குண்டத்தில் இறங்கித் தீமிதித்தார். தனைத் தொடர்ந்து, விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் மற்றும் தாய்மார்கள் தங்களது பிஞ்சுக் குழந்தைகளைக் கைகளில் ஏந்தியபடி “அம்மா தாயே… மாரியம்மா…” என்ற பக்தி கோஷத்துடன் தீக்குண்டத்தில் இறங்கிப் பூமிதித்து அம்மனுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
கா.புதூரிலும் விமரிசையாக நடைபெற்ற விழா இதேபோன்று, எடப்பாடி கா.புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலிலும் ஆடித் திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர். பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இத்தீமிதி திருவிழாவால் எடப்பாடி நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டு காட்சி அளித்தது.
நெல்லை மின்சார வாரியத்தின் குளறுபடி: மாற்றி பில் அனுப்பிய அதிகாரிகளுக்குக் அபராதம்!
