நான் சொத்துக்கள் வாங்கியதே கிடையாது- எடப்பாடி பழனிசாமி
வேட்புமனுவில் சொத்துமதிப்பை தவறாக காட்டிய புகாரில் வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 1989ம் ஆண்டுக்கு பிறகு என் மீது எந்த சொத்தும் கிடையாது என பதிலளித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “என்னிடம் சொத்தே இல்லை, எந்த சொத்தையும் என் பெயரில் நான் வாங்கியதில்லை. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டால், இன்னும் அதிக விஷயங்கள், பணம் எங்கெங்கு இருக்கு என்பதை சொல்லிவிடுவார் என்பதால் அவரை நீக்காமல், துறை மாற்றம் செய்துள்ளனர். பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதனை அதிமுக செய்யும்.

திமுக அரசின் ஊழல் குறித்தும் நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பேசிய ஆடியோ பற்றியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெளிவாக சொல்லியிருக்கிறோம். அவர்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பாமக, தேமுதிக, அதிமுக இன்று அமமமுக என்று தான் போகும் எந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் இருந்த பண்ருட்டி பேசவே தகுதியில்லாதவர். துரோகிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓர் அணி அமைத்திருக்கின்றனர்” என்றார்.