spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்25 கோடி அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்... மான நஷ்ட வழக்கு தொடுத்த பிரித்விராஜ்

25 கோடி அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்… மான நஷ்ட வழக்கு தொடுத்த பிரித்விராஜ்

-

- Advertisement -

தன்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட ஊடகத்தின் மேல் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளதாக பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவபர். இவர் தமிழில் பாரிஜாதம், கண்ணாமூச்சி ஏனடா, சத்தம் போடாதே, வெள்ளித்திரை நினைத்தாலே இனிக்கும், இராவணன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கினார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

we-r-hiring

சில மாதங்களுக்கு முன்பாக மலையாள சினிமாவில் அதிக கருப்பு பணம் புழங்குவதாக அந்தோணி பெரும்பாவூர் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் உள்பட பல மலையாள நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அதில் பிரித்விராஜ் இடத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த கருப்பு பணம் தொடர்பான விவகாரத்தில் பிரித்விராஜ் வருமான வரித்துறையினருக்கு 25 கோடி அபராதம் செலுத்தியதாக பல மலையாள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இதையடுத்து பிரித்விராஜ் இச்செய்தி உண்மையில்லை எனவும் இவ்வாறு செய்திகள் பரப்பும் ஊடகங்களின் மீது வழக்கு தொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.
“நான் இந்த மாதிரியான செய்திகளை வழக்கமாக புறக்கணித்து விடுவேன்.  ஊடகங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் சிலபொய்யான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தவித அபராதமும் செலுத்தவில்லை. என் மீது அவதூறு பரப்பியதற்காக நான் மான நஷ்ட வழக்கு தொடுப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ