spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இம்ரான் கானை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

இம்ரான் கானை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

இம்ரான் கானை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
File Photo

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

we-r-hiring

கதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்… வில்லன் ஆன கௌதம் மேனன்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கு விசாரணைக்காக, இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற போது, அவரை துணை ராணுவப் படையினர், சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், துணை ராணுவப் படையினர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டு, இம்ரான் கானை கைது செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒருவரை நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி கைது செய்தது எப்படி என வினா எழுப்பியது. பிணை வாங்குவதற்காக நீதிமன்றம் வந்த இம்ரான் கானிடம் துணை ராணுவப் படையினர், தவறாக நடந்துக் கொண்டனர் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அன்பை விதைக்கும்‌ படைப்பாக மட்டுமே உருவாக்கியுள்ளோம்… ‘இராவணக் கோட்டம்’ குறித்து படக்குழு!

துணை ராணுவப் படையினரின் செயலால் நீதிமன்றத்தின் மாண்பு சிதைந்து விடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இம்ரான் கானை தங்கள் முன்பு ஒரு மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டார். இம்ரான் கானின் கைது அவசியமற்றது என்றும், சட்ட விரோதமானது என்றும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இம்ரான் கான் வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ