Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!

திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத்தில் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!

எ.வ.வேலுவின் குற்றச்சாட்டு
விவாதம் நடைபெற்ற போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதற்குப் பின்னணியில் தூண்டுதலாக இருந்தது ஓசூரைச் சேர்ந்த அருள் என்பவர் தான். அவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் தொடர்பும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

we-r-hiring

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி
எ.வ.வேலுவின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: திமுக இருந்த போது, பரந்தூர் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு இதே அருளைத் தான் திமுக தலைமை அழைத்தது.

அருள் உடன் நின்றுதான் அன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டங்களை நடத்தினார். அந்த போராட்டங்களின் பின்னணியில் நானும் வேலை செய்திருக்கிறேன்.

அதனால் திமுகவின் பலமும் தெரியும், அதன் பலவீனமும் எனக்கு நன்றாகவே தெரியும் என்று அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தவெக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டமன்றத்தில் நேருக்கு நேர் அளித்த இந்தப் பதிலடி, அவையில் பெரும் பரபரப்பையும் சூடான விவாதத்தையும் ஏற்படுத்தியது.

ராஜினாமாவை பார்த்ததும் அழைத்த விஜய்: செப்டம்பர் 10-இல் தவெக-வில் இணைவதாக நடிகர் தேவன் அறிவிப்பு!

MUST READ